கனத்தச் சிறகு
உன் நினைவென்னும்
அடைமழையில்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
கனத்துக்கிடக்கிறது
என் சிறகு
இருந்த இடத்திலேயே
நகராமலிருக்கிறேன்
உன் அடைமழை
எப்போது நின்று...
நான் எப்போது சென்று...
எப்போது
என் சிறகை விரித்து...
பறந்து... மறந்து....
திரிந்து... தொலைந்து போக...
~ ஜெய் கபி
Comments
Post a Comment