சாரலோடு தேநீர்

அதென்ன பெரிய 
காதலியின் முத்தம்!

அடைமழையில்
ஜில்லென்ற காற்று
கன்னம் மோதும் வேளையில் 
பட்டுத் தெறிக்கும் சாரல்
தொட்டுப் போவதில்
அந்த மழையோடு
உரையாடும் 
மரங்களையும் வீடுகளையும்
பார்த்துக்கொண்டே சூடாக
தேநீர் அருந்தியிருக்கிறீர்களா?

           ~ ஜெய் கபி 

Comments

Popular Posts