பிறந்தநாள் பரிசு
மாத இறுதி
நாளை மகளின் பிறந்த நாள்
அப்பா ஆடை
வாங்கி வருவார் என்று
ஆசையாய் தூங்காமல்
காத்திருந்த மகளுக்கு
ஏமாற்றத்தைப் பரிசளிக்கப் போகிறோம்
என்பதை நினைத்து
வருந்தி கண்கள் கலங்க
வீடு நோக்கி நடந்தவனை
கூப்பிட்டு கொடுத்தார்கள்
ஒட்டுக்கு ஐநூறு ரூபாயை
~ ஜெய் கபி
Comments
Post a Comment