எனக்குத் தெரியும் நான் ஏமாளியென்று
அன்பாகப் பழகி
நட்பாகி உறவாடி
என்னை ஏமாற்றுகிறீர்கள்
பரவாயில்லை
என்னை ஏமாற்றுங்கள், பயன்படுத்துங்கள், பிரியுங்கள்
எனக்கு உங்கள் மேல்
கோபமோ வெறுப்போ இல்லை
ஆனால், கொஞ்சமாவது
நான் ஏமாறுவதை
எளிதில் கண்டுபிடிக்காமலிருக்க
முயலுங்கள்
நீங்கள் விட்டுப் போகும்வரை
நான் ஏமாறுவது தெரியாத மாதிரி
நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது
~ ஜெய்ஹிந்த் கபிலன்
thanks
ReplyDelete