அப்பாவின் சிரிப்பு
இதயம் முழுதும் வலியோடு
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தேன்
சொல்வதற்கு அவ்வளவு வலிகளும் ஏமாற்றங்களும்
அப்பாவின் சிரிப்பைப் பார்த்தப் பிறகு
வலிகளை பகிர மனம் வரவில்லை
வலிகளை மறைத்துக் கொண்டேன்
பிறகு அப்படியே வலிகள் மறந்து போயின
அப்பாவின் சிரிப்பிற்கு
மகன்களின் வலிகளை மாயமாக
மறைய வைக்கும்
சக்தி இருக்கிறதென்பதை
அன்றுதான் தெரிந்து கொண்டேன்
~ ஜெய் கபி
Comments
Post a Comment