ஆலிங்கனம்

இரவு 
வெட்ட வெளியில்
மொட்டை மாடியில்
தனியே ஓரமாய்
அமர்ந்த ஒரு பொழுது
மேகங்கள் சூழ்ந்து 
நிலவினை மறைத்தது
நானும்
சோகங்கள் சூழ்ந்து
சுயநினைவினை இழந்து கொண்டிருந்தேன்
வேறன்ன செய்ய!
என்னவளின் நினைவுத்துளிகள்
என்னுள் முழுதும் விழுந்து 
என்னை நனைக்க உட்படும் 
அதே நேரம் 
சின்ன இடி
சில்லென்ற காற்று
பிறகு
ஆலி என்னை 
ஆலிங்கனம் செய்தது.
தற்காலிகமாக நினைவினில் நனையாமல் தப்பித்தேன்

               ~ ஜெய் கபி 

Comments

Popular Posts