வெற்பு

வெற்பு
அதன் உச்சியில் நான்
என் முகத்தில் 
வெறுப்பு
என் வாழ்வில்
வெறுமை
பொறுமையற்றுப் போய்
தான் இந்த முடிவு
மனம் மாறிவிட்டேன்
அப்படியே அருவியில் 
குளித்துவிட்டு
வீடு வந்துவிட்டேன்
வேறென்ன செய்ய!
மலைக்கு அருகில் கூட
ஒரு பக்கமலை உள்ளதே
பிறகு நான் எப்படி 
தனியே இருந்துவிட முடியும்
என்று தான் நினைத்திருந்தேன்
ஆனால் இப்போது
நான் 
ஏறி இறங்கிய மலை
தனி மலை
வெறுமை பழகிய பிறகு
வெற்பின் உச்சியின் நின்றும்
சிரிக்கத்தான் தோன்றுகிறது...

            ~ ஜெய் கபி 

Comments

Popular Posts