அசும்பும் நிகழ்வுகள்
அசும்பு போல
அவ்வப்போது யாருக்கும் தெரியாமல்
விசும்புகிறேன்
யாருக்கும் நான் அழும் காரணம்
தெரிந்திடக் கூடாது
நான் உன்னைக் காதலித்தது
உனக்கு என்னை யாரென்றே தெரியாதது
இப்போது உனக்கு திருமணம் ஆனது
எதுவுமே என்னைத் தவிர யாருக்கும்
தெரியாது
என் கண்ணீர் மட்டும் அசும்பினால் போதும்
மறைத்த எனது உண்மைகளை
மறந்தேனும் அசும்பிட கூடாதல்லவா
அதனால் தான் விசும்புகிறேன்
~ ஜெய் கபி
Comments
Post a Comment