உடைந்தது ஊடல்
நானும் அவளும்
கடலோரத்திலே
வாடையிலே
அவள் வாடையிலே
அதைப் பார்த்து
அவளின் பூவும் நானும்
வாடையிலே
ஊடலிலே
மனத் தேடலிலே
செய்வதறியாமல் இணைத்தேன்
என்னிதழை
அவள் கன்னத்திலே
வெடுக்கெனத் திரும்பிய
கணத்திலே
பதறிப்போனேன்
பயத்திலே
அவளின்
கோபம் மறந்த
சிரிப்பினிலே
அவள் அணைப்பினிலே
உடைந்து போனது ஊடல்
நானும் அவளும்
கடலோரத்திலே
நிலவோ விழியோரத்திலே
அவளோ நெஞ்சோரத்திலே
~ ஜெய்ஹிந்த் கபிலன்
Comments
Post a Comment