மீண்டும் குமைகிறது

நீ வரும்முன்
கசகசவென்றுதான் இருந்தது
அதிகம் வியர்த்தது 
படபடத்தது
நீ வந்தப்பின்
குளுகுளுவென்று இருந்தது
குளிர்ந்த காற்றில் அலைந்தேன்
தென்றலால் தீண்டப்பட்டேன்
சில்லென்றாகியது
நீ போனப்பின்
மீண்டும் குமைகிறது

     ~ ஜெய்ஹிந்த் கபிலன்

Comments

Popular Posts