பெயல் II
துயிலுரித்தேன்
இள
வெயிலாய் இருந்தது
வயலில் நடந்துகொண்டிருந்தேன்
சட்டென மேகம்
மயிலாய் தோகை விரித்தது
முயலாய்த் தாவி ஓடினேன்
புயலாய்க் காற்று வீசியது
வீடடையும் நோக்கில் விரைந்தேன்
செயலற்றுப் போனேன்
கயல் துள்ளும் குளமோரம்
கண்டேன்
இயல் இசை நாடகமாய்
அயல் ஊரின் அழகுத் தமிழ்
அப்போது ஆரம்பித்த
பெயல்
விழுந்தது என்மேல் எனினும்
நனைந்தது இதயம்
~ ஜெய் கபி
Comments
Post a Comment