லோலாக்கு II

முதல் முறை
லோலாக்கு
அணிந்துகொண்ட அனு
அன்று தன் வயது
குழந்தைகளிடம்
வழக்கத்திற்கு மாறாக
தலையை ஆட்டி ஆட்டி
பேசினாள் 
அனைவரும் இவளின்
லோலாக்கை கவனித்தது
தெரிந்ததும்
குடுகுடுவென ஓடிப் போய்
அதைக் கழட்டி 
வெறும் காதுடன் இருந்த
தன் அம்மாவிடம் 
கொடுத்துவிட்டு
மீண்டும் விளையாட ஓடிவிட்டாள்

          ~ ஜெய் கபி 

Comments

Popular Posts