தேயாதிரு


அவள் என் அருகினில்
இருந்தபோது இருந்த 
உன் தூரம்
இப்போது இல்லை 
அருகில் மிக அருகில் 
இருக்கிறாய் 
கிட்டத்தட்ட 
கண்கள் நிரம்பி வழியும் அளவிற்கு

நீ தேயும்போது தான் 
நானும் தேம்புகிறேன்
எனக்காக ஒன்று மட்டும் செய்

நான் அவளை தேடாதிருக்க  
தயவுசெய்து நீ தேயாதிரு
அதுபோதும்.     

         ~ ஜெய் கபி 

Comments

Popular Posts