உன்னை மிஞ்சும் ஒருத்தி

உனக்குத் திமிர்
அதீத அழகால் 
அவதரித்த ஆணவம் உனக்கு
ஆடும்வரை ஆடிக்கொள்

ஏற்கனவே அவளைப் பார்த்ததிலிருந்து
யார் பார்வையிலும் 
விண்மீன்கள் தெரியவில்லை

இனி வானில்
மின்னப்போவதில்லை என்று
தெறித்து ஓடினவாம் 

நீயும் எத்தனை நாள்
என்று பார்ப்போம்.

எல்லாம் என்னவள் இரவில்
உன் கண்ணில் படும்வரை தான்

நீ அவளைப் பார்த்துவிட்டாள்
உனக்கு அன்றிலிருந்து 
தேய்பிறை மட்டும்தான் 

               ~ ஜெய்ஹிந்த் கபிலன் 

Comments

Popular Posts