கார்சிவப்பு
விழி வழி மொழி பொழியும்
செவ்விழி உனது
இதழ் வழி கதை நவிலும்
காரிதழ் எனது
விழியையும் இதழையும்
இடம் மாற்றிக்கொண்டோம்
என்னுடைய உன் செவ்விழி
உன்னை தின்னப் பார்க்கிறது
உன்னுடைய என் காரிதழ்
என்னை உண்ணப் பார்க்கிறது
ஒரு முறை
ஒரே ஒரு முறை
சுற்றம் மறந்து
இருவரும்
விழிப்பசியையும் இதழ் பசியையும்
தீர்த்துக்கொள்வோம் வா...
~ ஜெய்ஹிந்த் கபிலன்
Comments
Post a Comment