காலி தைல டப்பா
இன்று ஏனோ
காலையிலிருந்தே அம்மா
கால்வலியிலிருந்தாள்
வீட்டு வேலைகளை கொஞ்சம்
சிரமத்தோடும் மெதுவாகவும் செய்தாள்
வேலைக்கு தாமதமாகிவிட்டது
கடைசி பேருந்து
கிளம்பும் முன்
கடகடவென்று ஓடி ஏறிவிட்டாள்
இரவு தூங்கும் முன்
என்னிடம் தான் தைலம்
தேய்த்துவிடச் சொல்லுவாள்
மாதக் கடைசி
சம்பளம் போட இன்னும்
நான்கு நாட்கள் இருக்கிறது
தைலம் தீர்ந்துவிட்டது
அவளுக்கு ஞாபகம் இருக்குமா?
~ ஜெய் கபி
Comments
Post a Comment