நெருங்கி நொறுங்கிய நெஞ்சு
நெருங்கியவர்களால்
நொறுங்கப்பட்ட
நெஞ்சுடையவன் நான்
அவர்களிடம் அதை
சத்தமிட்டு எடுத்துக்கூறி
அவர்களுக்குள் குற்றவுணர்ச்சியை
கொடுத்துவிட்டு பிரியலாம்
அல்லது
அமைதியாக ஏதும் கூறாமல்
எனக்குள் குற்றவுணர்ச்சியை
எடுத்துக்கொண்டு பிரியலாம்
இரண்டுக்கும் மனது
ஒத்துவர மறுக்கிறது.
ஆனால், கனக்கிறது!
ஒருவேளை அவர்கள்
அதற்கு காரணங்கள்
கூறிவிட்டால்....
காரணங்களால்
காயங்களை
ஆற்ற முடியாது
அல்லவா!
~ ஜெய்ஹிந்த் கபிலன்
Comments
Post a Comment