அம்மா = ஆசைத்துறவி
எனக்குப் பிடித்ததெல்லாம்
அவளுக்கும் பிடிக்கும்
என் தங்கைக்குப் பிடித்ததெல்லாம்
அவளுக்கும் பிடிக்கும்
என் தந்தைக்குப் பிடித்ததெல்லாம்
அவளுக்கும் பிடிக்கும்
உண்மையில்
அவளுக்கு பிடித்துதான் இருக்கிறதா
நிஜமாக
அவளுக்கு என்னதான் பிடிக்கும்
இதுவரை தனக்கென
எதுவும் கேட்டதுமில்லை
எதுவும் செய்ததுமில்லை
என் அம்மா
அம்மா ஆனதிலிருந்து
ஆசைப்படுவதை நிறுத்திக் கொண்டாளா!
~ ஜெய்ஹிந்த் கபிலன்
Comments
Post a Comment